நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறை பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான படகில் கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு மற்றொரு படகில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் கோபி, வேலவன், சுகுமாரன், காளிதாஸ் ஆகிய நான்கு மீனவர்களையும் கடுமையாக தாக்கி அவர்கள் பிடித்து வைத்திருந்த 600 கிலோ மீன், வலைகள் மற்றும் உபகரணங்கள் உள்ளிட்ட 3 லட்சம் மதிப்பிலான பொருள்களை பறித்து சென்றுள்ளனர்.
இதனையடுத்து அவசரமாக கரை திரும்பிய மீனவர்களில் படுகாயமடைந்த கோபியை சக மீனவர்கள் சிகிச்சைக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
கடந்த சில மாதங்களில் மீனவர்கள் மீது 4ஆவது முறையாக தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய மாநில அரசுகள் இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என மீனவர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது. மேலும் இதுகுறித்து வேதாரண்யம் கடலோர காவல் படை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.