ETV Bharat / state

மகனின் காதலியை வன்புணர்வு செய்த தந்தை; திருமணம் செய்துகொண்ட இளம்ஜோடி - nagai son's lover raped

நாகை: வேதாரண்யம் அருகே மகனின் காதலியை வன்புணர்வு செய்த விவகாரத்தில், தன் தந்தையால் பாதிக்கப்பட்ட காதலியை எந்த சூழ்நிலையிலும் கைவிட மாட்டேன் எனக்கூறி அந்த இளைஞர் அப்பெண்ணை திருமணம் செய்துகொண்டுள்ளார்.

at-nagai-father-raped-sons-lover-case-lovers-got-married
மகனின் காதலியை வன்புணர்வு செய்த விவகாரம்; திருமணம் செய்த காதலர்கள்!
author img

By

Published : Feb 1, 2020, 4:35 PM IST

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள செம்போடை கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பு நித்யானந்தம் (50). அமமுக பிரமுகரான இவர் துணிக்கடை நடத்தி வந்துள்ளார்.

இவருடைய மகன் முகேஷ் கண்ணன் (20). இவரும் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த 21 வயதான இளம் பெண் ஒருவரும் காதலித்து வந்தனர். மகன் காதலிப்பதை கருப்பு நித்யானந்தம் விரும்பவில்லை. இதனால் அந்த பெண்ணை தன்மகனுக்கு திருமணம் செய்து வைப்பதாகக் கூறி அழைத்துச்சென்று அப்பெண்ணுக்கு தாலி கட்டி, பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு கருப்பு நித்யானந்தம், இதற்கு உடந்தையாக இருந்த சக்திவேல், பவுன்ராஜவள்ளி ஆகிய மூன்று பேரையும் காவல் துறையினர் கைது செய்து வேதாரண்யம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அதில் அந்த மூன்று பேரையும் 15 நாட்கள் காவலில் வைக்க வேதாரண்யம் நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் மூவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் தன் தந்தையால் காதலி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான நிலையிலும், எந்த சூழ்நிலையிலும் காதலித்த பெண்ணைக் கைவிட மாட்டேன் எனக் கூறி திருமணம் செய்து கொண்டுள்ளார். வேட்டைக்காரனிருப்பு காவல் நிலையத்தில் காவலர்கள் முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

இதையும் படியுங்க: காதல் திருமணம் செய்துகொண்ட கல்லூரி மாணவி கடத்தல்: மீட்டுத் தருமாறு கணவர் புகார்

Intro:வேதாரண்யம் அருகே
செம்போடையில்
மகனின் காதலியை கடத்தி பலாத்காரம் செய்த தந்தை. தந்தையால் பலாத்காரம் செய்யப்பட்ட காதலியை திருமணம் செய்துகொண்ட மகன். Body:வேதாரண்யம் அருகே
செம்போடையில்
மகனின் காதலியை கடத்தி பலாத்காரம் செய்த தந்தை. தந்தையால் பலாத்காரம் செய்யப்பட்ட காதலியை திருமணம் செய்துகொண்ட மகன்.

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே உள்ள செம்போடை கிராமத்தை சேர்ந்தவர் கருப்பு நித்யானந்தம்(வயது 50) அமமுக பிரமுகரான இவர் துணி கடை வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மகன் முகேஷ்கண்ணன்(20). இவரும், பக்கத்து கிராமத்தை சேர்ந்த 21 வயது பெண் ஒருவரும் காதலித்து வந்தனர். இருவரும் ஒன்றாக ஐ.டி.ஐ. படித்தபோது இவர்களுக்கிடையே பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்துள்ளனர்.

படித்து முடித்த பிறகு இருவரும் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஒன்றாக வேலை பார்த்து வந்தனர். இவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

மகன் காதலிப்பதை கருப்பு நித்யானந்தம் விரும்பவில்லை. அவர்கள் காதலை துண்டிக்க அவர் ரகசியமாக திட்டமிட்டார். இந்த நிலையில் சம்பவத்தன்று கருப்பு நித்யானந்தம், தனது மகனின் காதலி வீட்டுக்கு சென்று அந்த பெண்ணை தனியாக சந்தித்தார். தன்னுடன் வந்தால் என்மகனுக்கு உன்னை திருமணம் செய்து வைப்பதாக கூறி உள்ளார்.

இதை நம்பி அந்த பெண், அவருடன் சென்றார். ஆனால் கருப்பு நித்யானந்தம் தனது மகனுக்கு அந்த பெண்ணை திருமணம் செய்து வைக்காமல் செம்போடை பகுதிக்கு காரில் கடத்தி சென்று அங்கு உள்ள ஒரு கடையில் வைத்து, மிரட்டி அந்த பெண்ணுக்கு தாலி கட்டி, பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.

பின்னர் அந்த பெண்ணை செம்போடை கிராமத்திற்கு பக்கத்தில் உள்ள அவரிக்காடு கிராமத்தில் ஒருவருடைய வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்துள்ளார்.

இந்த நிலையில் அந்த பெண் அந்த வீட்டில் இருந்து தப்பிச்சென்று வேதாரண்யம் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், கருப்பு நித்யானந்தம் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. மேலும் அவருக்கு உடந்தையாக அவரிக்காடு கிராமத்தை சேர்ந்த சக்திவேல்(47), அவரது மனைவி பவுன்ராஜவள்ளி(38) அடைக்கலம் கொடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கருப்பு நித்யானந்தம், சக்திவேல், பவுன்ராஜவள்ளி ஆகிய 3 பேரையும் கைது செய்து வேதாரண்யம் கோர்டில் ஆஜர்படுத்தினர். 3 பேரையும் 15 நாட்கள் காவலில் வைக்க வேதாரண்யம் நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Update

இந்நிலையில் தன் தந்தையால் தனது காதலி பாலிய துன்புறுத்தலுக்கு ஆளானதை அறிந்த முகேஷ்கண்ணன் தனது காதலியை எந்த சூழ்நிலையிலும் கைவிட மாட்டேன் எனக் கூறியதையடுத்து வேட்டைக்காரனிருப்பு காவல் நிலையத்தில் இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.