சட்டப்பேரவையில் இன்று நிதியமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் மாநில பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். அப்போது, ஆறுகாட்டுத்துறையில் துறைமுகம் அமைக்கப்படும் என அவர் தெரிவித்தார். இந்த அறிவிப்பு கடந்த பட்ஜெட்டிலும் அறிவிக்கப்பட்டதாக நாகை மாவட்ட மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து பேசிய மீனவர்கள், ஏற்கெனவே கடந்த ஆண்டு அறிவித்த திட்டத்தை இந்த ஆண்டும் பட்ஜெட்டில் அரசு அறிவித்துள்ளது என்றும் மீன்வளத்துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகை, எந்ததெந்தப் பணிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்பதனை தெளிவாகத் தெரிவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
மேலும், ஏற்கெனவே ஒதுக்கப்பட்டுள்ள நிதியைக் கொண்டு உடனடியாக ஆறுகாட்டுத்துறை துறைமுகப்பணிகளை விரைந்து முடிக்கவேண்டும் என்றும் தற்போதைய பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ள தொகை மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கு எவ்வாறு செலவிடப்படும் என்பதனையும் தமிழ்நாடு அரசு தெளிவுபடுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.
இதையும் படிங்க: 'மாநில பட்ஜெட்டிலும் எங்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது'