ETV Bharat / state

கோனேரிராஜபுரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசனம்..

author img

By

Published : Jan 6, 2023, 9:00 AM IST

Updated : Jan 6, 2023, 9:07 AM IST

கோனேரிராஜபுரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசனம்

08:23 January 06

திருவாதிரை திருநாளை முன்னிட்டு பிரசித்திபெற்ற கோனேரிராஜபுரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது.

மயிலாடுதுறை: குத்தாலம் தாலுகா கோனேரிராஜபுரத்தில் திருநாகேஸ்வரம் ராகு பகவான் சுவாமி கோயிலின் உபகோயிலான தேகசௌந்தரி அம்பாள் உடனுறை உமாமகேஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இத்திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் ஆனந்தக் கூத்தராகிய ஸ்ரீநடராஜப் பெருமான் உலகில் மிகப் பெரிய வடிவமாக எட்டரை அடி உயரம் கொண்டு, காண்போரை சுண்டி இழுக்கும் நர்த்தன சுந்தர நடராஜராக விளங்குகிறார்.

இக்கோயிலில் கடந்த 28ஆம் தேதி திருவாதிரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கோயிலில் தினமும் சிறப்பு அபிஷேகம், சதுர்வேத பாராயணம், திருவெம்பாவை பாராயணம், நீராஞ்சன தீபாராதனை ஆகியவை நடைபெற்றது. திருவாதிரை திருநாளை முன்னிட்டு இன்று (ஜன.6) அதிகாலை ஆருத்ரா தரிசனம் விமரிசையாக நடைபெற்றது.

இதனை முன்னிட்டு அதிகாலை 3.30 மணிக்கு சன்னதி திறக்கப்பட்டு, தேகசௌந்தரி அம்பாள் உடனுறை நடராஜ பெருமானுக்கு பால், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர், சர்க்கரை, தேன், பழவகைகள் கொண்டு சோடஷ அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் திராட்சை மாலை, நகைகள், உத்திராட்சமாலை, வண்ணமலர் மாலைகள், புலித்தோல் பட்டாடை அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

இதையடுத்து சுவாமிக்கு யாகசாலையில் இருந்து ரட்சை பெற்று வைக்கப்பட்டு சோடஷ உபச்சாரம் நடைபெற்றது. மேளதாளம் முழங்க மகாதீபாராதனையும், ஆருத்ரா தரிசனமும் நடைபெற்றது. பூஜைகளை சதாசிவம் குருக்கள் உள்ளிட்ட சிவாச்சாரியார்கள் செய்தனர். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

இதையும் படிங்க: ஆருத்ரா தரிசனம்: தஞ்சாவூர் பெரிய கோயிலில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்

Last Updated : Jan 6, 2023, 9:07 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.