தமிழ்நாடு, புதுச்சேரியில் பிறப்பிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவைப் பயன்படுத்தி, காரைக்காலிலிருந்து நாகைக்கு அதிகளவு மது பாட்டில்கள் கடத்தப்படுவதாகக் காவல் துறையினருக்கு புகார்கள் வந்துள்ளன. இதையடுத்து, நாகப்பட்டினம் தனிப்படை காவல் துறையினர் வாஞ்சூர் சோதனைச் சாவடியில் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது வேகமாக வந்த இன்னோவா கார் ஒன்றைக் காவல் துறையினர் தடுத்தபோதும், கார் நிற்காமல் சென்றுள்ளது. இதையடுத்து, காரை துரத்திச் சென்ற காவல் துறையினர், வாஞ்சூர் சோதனைச் சாவடி அருகே காரை மடக்கிப் பிடித்தனர்.
பின்னர் நடத்தப்பட்ட சோதனையில், 46 அட்டை பெட்டிகளில் இருந்த சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள இரண்டு ஆயிரத்து 208 மது பாட்டில்கள், புதுச்சேரியிலிருந்து கடத்தி வரப்பட்ட 100 லிட்டர் கள்ளச்சாராயம் ஆகியவைக் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, டி.ஆர்.பட்டினத்தைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவரைக் காவல் துறையினர் கைது செய்தனர். செந்தில்குமாரின் சொகுசு காரும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதையும் படிங்க: காதலியை மனைவியாக்கிய அண்ணன் அவர் பிள்ளைகளை கொலை செய்த தம்பி