கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்ததை அடுத்து பொதுமக்கள் நேற்று சொந்த ஊர்களுக்குத் திரும்பினர்.
இதையடுத்து நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஏராளமானோர் வெளியூரிலிருந்து பேருந்து நிலையத்திற்கு வந்து சென்றதால் மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையத்தில் நகராட்சி ஆணையர் புவனேஸ்வரன் முன்னிலையில் நகராட்சி வாகனத்தில் கொண்டுவரப்பட்ட 5 விழுக்காடு லைசால் கலந்த கிருமிநாசினி பீய்ச்சி அடிக்கப்பட்டு அனைத்துப் பகுதிகளும் தூய்மைப்படுத்தப்பட்டன. மேலும் பொதுமக்கள் அதிகம் கூடிய பகுதிகளிலும் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதையும் படிங்க... 144 தடை உத்தரவு: பாதுகாப்பு பணியில் 1,000க்கும் மேற்பட்ட காவலர்கள்