நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தீபாவளிக்காக பல்வேறு நபர்களிடம் இருந்து லஞ்சப் பணம் பெறுவதாக லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அதிரடியாக நுழைந்த டிஎஸ்பி மனோகரன் தலைமையிலான 10-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்கள் அங்கு திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அலுவலகத்தின் கழிவறை மற்றும் மேஜை லாக்கரில் இருந்து கணக்கில் வராத லஞ்சப்பணம் 56 ஆயிரம் ரூபாய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, 56 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்புத்துறையினர், இதுதொடர்பாக கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் கஸ்தூரி மற்றும் பிற அலுவலர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.