மயிலாடுதுறை: திருமண நிகழ்வில் பங்கேற்பதற்காக கும்பகோணம் வருகை தந்திருந்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று (செப்.08) காலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில்,
நீட் தேர்வு முடிவு இன்று வெளியாகியுள்ள நிலையில் மாணவர்கள் தவறான முடிவு எதும் எடுக்கக்கூடாது. படிப்பதற்கு எவ்வளவோ துறைகள் இருக்கின்றது. இதில் பெற்றோர்கள் பிள்ளைகளிடத்தில் தங்களுடைய கருத்துக்களை திணிக்க கூடாது. மத்திய அரசு, மாநில அரசின் அதிகாரத்தை பறித்து வருவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். குறிப்பாக, கல்வியை மாநில பட்டியலிலுக்கு மீண்டும் கொண்டு வர வேண்டும்.
மேலும், காவிரி நதியில் குறுக்கே கூடுதல் தடுப்பணைகள் கட்டி, வீணாக கடலில் கடக்கும் உபரி நீரை சேமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கர்நாடக போன்ற மாநிலத்தில், மத சாதி கலவரங்கள் நீடிக்கும் வேளையில் தேச ஒற்றுமை அவசியமானது. அவ்வகையில் காங்கிரஸ் கட்சி சார்பாக ராகுல் காந்தி பாதயாத்திரை தொடங்கி இருக்கிறார் அதனை பொறுத்திருந்து பார்ப்போம்.
விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு நெல் குவிண்டாலுக்கு ரூபாய் 3 ஆயிரம் என குறைந்தபட்ச ஆதார விலையாக அரசு அறிவிக்க வேண்டும். பின் வருகிற 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் இணைந்து பாட்டாளி மக்கள் கட்சி தமிழகத்தில் ஆட்சி அமைக்கும். இதற்கு வருகிற 2024 நாடாளுமன்றத் தேர்தலில் இருந்து எங்களது வியூகமாக அமையும் என பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
இதையும் படிங்க: எம்பியின் பிஏ எனக்கூறி உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சுற்றிய நபர் கைது