மயிலாடுதுறை: மாவட்டம் கொள்ளிடத்தை அடுத்த அளக்குடியில் பொதுப்பணித்துறையால் அளக்குடியிலிருந்து திருக்கழிப்பாலை வரை தடுப்பனை கட்ட ஆய்வு பணி நடைபெற்று வருகிறது. இந்த தடுப்பனை கட்டும் இடத்தை பாமக மாநில தலைவர் அன்புமணி ராமதாஸ் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ”கடல்நீர் உட்புகுவதால் நீர் நிலைகள் பாதிக்கப்படுவதாகவும், இதுதொடர்பாக கடந்த 2017 ம் ஆண்டில் கொள்ளிடத்தில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டோம்.
அதன் பிறகே ஆதனூர் குமாரமங்கலம் தடுப்பனை கட்டப்பட்டு வருகிறது. இதேபோல் அளக்குடி தடுப்பனை இங்குள்ள மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. முந்தைய ஆட்சியில் நிதி ஒதுக்கியும் கிடப்பில் போடப்பட்டது. தற்போது பொதுப்பணித்துறை சார்பில் ஆய்வு செய்து அளக்குடி முதல் திருக்கழிப்பாலை வரை இரண்டு கிலோமீட்டர் தொலைவில் சுமார் 570 கோடி மதிப்பீடு செய்து அனுப்பியுள்ளனர்.
”இந்த தடுப்பணை பணிகளை விரைந்து தொடங்க முதல்வரை வலியுறுத்துகிறேன். காவிரி படுகையில் கர்நாடக அரசால் எந்த ஒரு தடுப்பணையையும் இந்த திட்டத்தின் கீழ் கொண்டு வர முடியாது. இதை விவாதிக்க காவிரி மேலாண்மை வாரியத்திற்கு எந்த அதிகாரமும் இல்லை, ஆனால் கர்நாடகாவில் பாஜக ஆள்வதால் மத்திய அரசு கர்நாடகாவிற்கு சாதகமாக செயல்படுவதாகவும் மத்திய அரசு நடுநிலையாக செயல்படவேண்டும் எனவும் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டினார்”.
“மேலும் நீர் நிலைகளில் தடுப்பணைகளை கட்டி நீர்நிலை ஆதாரங்களைப் பாதுகாக்க வேண்டும், கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைத்ததை உடனே தடுத்து நிறுத்த வேண்டும்.
மற்றும் டெல்டா மாவட்டத்தை பாதுகாப்பான வேளாண் மண்டலமாக அறிவிக்க வைத்ததே நாங்கள் தான். டெல்டா மாவட்டங்களில் வேளாண்மையை அழிக்கும் எந்த ஒரு திட்டத்திற்கும் பாமக நேரடியாக எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடும் என்றார். கொள்ளிடம் ஆறு மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள அனைத்து ஆறுகளிலும் தடுப்பணைகளை தமிழக அரசு விரைந்து கட்ட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: பட்டாபிராம் முத்துமாரியம்மன் கோயிலில் ஐம்பொன் சிலைகள் திருட்டு - துரிதமாக மீட்ட காவல் துறை!