மயிலாடுதுறை: அம்மா மக்கள் முன்னேற்றக் கழக அவைத் தலைவர் வழக்கறிஞர் சந்திரமோகன் தாய்க் கழகமான அதிமுகவில் மீண்டும் இணைந்தார்.
இவர் ஏற்கெனவே ஒருங்கிணைந்த நாகை மாவட்டத்தில் மாவட்ட துணை செயலாளராக இருந்தவர். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அமமுகவில் இணைந்து மாவட்ட அவைத் தலைவராக பணியாற்றி வந்தார். இச்சூழலில், மயிலாடுதுறை அதிமுக மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மயிலாடுதுறை அதிமுக மாவட்ட செயலாளர் விஜிகே. செந்தில்நாதன் முன்னிலையில் 300 தொண்டர்களுடன் மீண்டும் தன்னை அதிமுகவில் இணைத்துக்கொண்டார்.
சீர்காழி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் அமமுகவில் இருந்து விலகி, அதிமுகவில் இணைந்திருப்பது அத்தொகுதியில் அமமுகவுக்கு பெரும் இழப்பாகவும், அதிமுகவுக்கு கூடுதல் பலமாகவும் பார்க்கப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில் மயிலாடுதுறை, சீர்காழி சட்டப்பேரவை உறுப்பினர்களுடன், அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.