ETV Bharat / state

வெற்றிவாகையை சூடிய விசிக வேட்பாளர் ஷாநவாஸ்!

திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் களமிறங்கிய ஆளூர் ஷாநவாஸ் 1232 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் தங்க கதிரவனை வீழ்த்தி வெற்றிபெற்றுள்ளார்.

author img

By

Published : May 2, 2021, 7:56 PM IST

நாகை தொகுதியில் ஷாநவாஸ் வெற்றி!
நாகை தொகுதியில் ஷாநவாஸ் வெற்றி!

நாகை மாவட்டத்தின் முக்கிய சட்டப்பேரவைத் தொகுதியாக நாகப்பட்டினம் திகழ்கிறது. தேர்தல் வரலாற்றைப் பொறுத்தவரை நாகப்பட்டினம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்டையாகத் திகழ்கிறது.

அதிகபட்சமாக மார்க்சிஸ்ட் கட்சி ஆறு முறை வெற்றிபெற்றுள்ளது. அதிமுக மூன்று முறையும், திமுக இரண்டு முறையும் வென்றுள்ளன.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முக்கிய முகமாகத் திகழும் ஷாநவாஸ் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் குன்னம் தொகுதியில் போட்டியிட்டார். திமுக, அதிமுக என்ற இரு பெரும் கட்சிகளையும் எதிர்த்துக் களம்கண்ட ஷாநவாஸ், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்றார்.

வெற்றி வாகையைச் சூடிய விசிக வேட்பாளர் ஷாநவாஸ்!

இந்நிலையில், அதிமுக கூட்டணியிலிருந்து தமிமுன் அன்சாரி விலகிய நிலையில், அதிமுக சார்பில் தங்க கதிரவன் வேட்பாளராகப் போட்டியிட்டார். அவரை எதிர்த்து, திமுக கூட்டணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆளூர் ஷாநவாஸ் களமிறங்கினார்.

தற்போது, ஆளூர் ஷாநவாஸ் 1232 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் தங்க கதிரவனை வீழ்த்தி வெற்றிபெற்றுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.