ETV Bharat / state

அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் வீடுகளுக்கே சென்று வழங்கப்படும் - மாவட்ட ஆட்சியர்

நாகை: கரோனா நோய்த் தொற்று ஏற்பட்ட இடங்களில் பொதுமக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த தேவையான பொருட்கள் அனைத்தும் வீடுகளுக்கே சென்று வழங்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

தற்காலிக காய்கறி மார்க்கெட்டில் ஆய்வு மேற்கொண்ட நாகை மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயர்

author img

By

Published : Apr 6, 2020, 11:38 PM IST

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயர், இன்று தற்காலிக காய்கறி மார்க்கெட்டில் ஆய்வு மேற்கொண்டார். காய்கறிகள் அதிக விலைக்கு விற்கப்படுகின்றனவா என்று ஆய்வு செய்த ஆட்சியர், வியாபாரிகளுக்குள்ள நடைமுறை பிரச்னைகள் குறித்து கேட்டறிந்தார்.

தொடர்ந்து தேவையான பொருட்கள் அனைத்தும் வீடுகளுக்கே சென்று வழங்கவும், அத்தியாவசிய காய்கறிகள் கொண்ட பை 100 ரூபாய்க்கு நகராட்சி சார்பில் விற்பனை செய்யப்படும் நடமாடும் காய்கறிக்கடையின் விற்பனையை தொடங்கி வைத்தார். அதனையடுத்து, ஆதரவற்ற பொதுமக்களுக்கு உணவு தயாரிக்கும் கூடத்தினை ஆய்வு செய்து, பொதுமக்களுக்கு உணவுப்பொட்டலங்களை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர், நாகப்பட்டினம் தாலுகாவில் 5 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்ட நிலையில், அப்பகுதி மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வராமலிருக்க தகுந்த பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய பொருட்களும் வீடுகளுக்கு நேரடியாக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

நாகை மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயர் ஆய்வு

மேலும் 32 பேருக்கு கரோனா சோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், அதன் முடிவுகள் இன்று தெரியவரும் என்றும், மேலும் யாருக்கும் பரவாமல் தடுக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது, பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே வந்தால் கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார். மேலும் பொதுமக்கள் தேவையின்றி வெளியே வந்தால் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய காவல் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.