புதுச்சேரி மாநிலம், காரைக்காலில் இருந்து மயிலாடுதுறை வழியாக அதிகளவில் சாராயம் கடத்தப்படுவதாக மயிலாடுதுறை மாவட்ட சிறப்பு தனிப்படை காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து, மயிலாடுதுறை நத்தம் மெயின் ரோட்டில் காவல் உதவி ஆய்வாளர் பாபுராஜா தலைமையில் தனிப்படை காவல்துறையினர் வாகன சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த நான்கு வாகனங்கள் நிற்காமல் வேகமாகச் சென்றது. இந்த வாகனங்களை காவல்துறையினர் விரட்டி சென்று தடுத்து நிறுத்தினர். பின்னர் வாகனங்களை சோதனை செய்தபோது 30 மூட்டைகளில் 1, 500 சாராய பாக்கெட்டுகள் இருப்பது தெரிய வந்தது. இதனை அடுத்து கடத்திக் கொண்டுவந்த சாராயத்தையும், கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். பின் வாகன ஓட்டுநர் ரமேஷ் என்பவரை கைது செய்து மயிலாடுதுறை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
வாகனங்கள் மூலம் சாராயம் கடத்தல்: தனிப்படை போலீசார் பறிமுதல்! - சாராய பாக்கெட்டுகள்
நாகப்பட்டினம்: வாகனங்கள் மூலம் காரைக்காலில் இருந்து கடத்திவரப்பட்ட 1,500 சாராய பாக்கெட்டுகளை சிறப்பு தனிப்படை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.