மயிலாடுதுறை: செம்பனார்கோவில் ஒன்றியத்திற்குட்பட்ட காட்டுச்சேரி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு இரண்டாம் கட்டத்தேர்தல் வரும் 9ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனால், வேட்பாளர்களின் பரப்புரை இன்றுடன் நிறைவடைந்தது.
அதிமுக வேட்பாளராகப் போட்டியிடும் சபரிநாதன் 30ஆவது வார்டுக்கு உள்பட்ட காட்டுச்சேரி, சந்திரபாடி ஊராட்சிகளில் உள்ள கிராமங்களில் வீதி வீதியாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது பொதுமக்கள் வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்து உற்சாகமாக வரவேற்றனர். தொடர்ந்து பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கியும், திமுகவின் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளைக் கூறியும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
பொதுமக்களின் காலில் விழுந்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து, தன்னை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: வாக்குப்பெட்டியை எடுக்கவிடாமல் தகராறு: தலை உருளும் போலீசாருக்கு..!