மயிலாடுதுறை: தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் "சாதி மறுத்த இணையர்கள்" சங்கமம் என்ற நிகழ்ச்சி அதன் மாநிலத் துணைத் தலைவர் மகேந்திரன் தலைமையில் இன்று (நவ.29) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், மாநில செயலாளர் வாஞ்சிநாதன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநில பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் 10 மாவட்டங்களில் இருந்து 80-க்கும் மேற்பட்ட சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட தம்பதியினர் பங்கேற்றனர். சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட தம்பதியினருக்கு, விருது வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. முன்னதாக, கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இக்கூட்டத்தில், சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்களுக்கு உரிய பாதுகாப்பு, தனி குடியிருப்பு வழங்க வேண்டும். ஆணவப் படுகொலைக்கு எதிராக சட்டப்பேரவையில் தனிச்சட்டம் நிறைவேற்ற வேண்டும். சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்களுக்கான சிறப்பு நிவாரண நிதியை ரூ.2 லட்சமாக உயர்த்த வேண்டும், கல்வி, வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதையும் படிங்க: காதல் திருமணம் செய்தவர்கள் மீது திருட்டு வழக்கு - காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை!