நாகப்பட்டினம் மயிலாடுதுறை கஸ்தூரிபாய் தெருவைச் சேர்ந்தவர் மதன்மோகன் (71). இவரது மனைவி மீனாட்சியம்மாள் (61) கடந்த 2019 ஆம் ஆண்டு, செப்டம்பர் 27 ஆம் தேதி உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். இவர்களுக்கு ஐந்து மகள்கள் உள்ளனர்.
ஆரம்ப காலத்தில் மதன்மோன் உதவி காவல் ஆய்வாளராக பணிபுரிந்துள்ளார். மிகக் கடினமான அந்த வாழ்க்கைச் சூழலில், அவரது மனைவி கொடுத்த ஊக்கத்தால் பணி ஓய்வுக்குப் பிறகும் மயிலாடுதுறையில் முக்கிய தொழில் அதிபர்களில் ஒருவராக உயர்ந்தார். தன்னுடைய கடின காலத்திலும், மகிழ்ச்சியான நாள்களிலும் உடனிருந்த மனைவியின் மறைவை இவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
அதனால், அவரது நினைவைப் போற்றும் வகையில், மதன்மோகன் தனது மனைவி, தாயின் சிலைகளை தத்ரூபமாக வடிவமைத்து, வீட்டின் முன்பாக கோயில் ஒன்றையும் கட்டியுள்ளார். மேலும், அதன் திறப்பு விழா, மதன்மோகனின் மனைவி இறந்தநாளான இன்று (செப்.27-2020) நடைபெற்றது. இந்த நிகழ்வில் கருடானந்த சுவாமிகள், மயிலாடுதுறை எம்.பி. ராமலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: இறந்த மனைவிக்கு சிலை அமைத்த மதுரை தொழிலதிபர்...!