ETV Bharat / state

டிக்-டாக் மூலமா மாட்டிக்கிட்ட பங்கு... சினிமா பாடலுடன் கள்ளச்சாராயம் காய்ச்சிய நபர்! - காய்ச்சிய நபர் டிக் டாக் வீடியோ மூலமா மாட்டிக்கொண்ட நபர்

நாகப்பட்டினம்: மது கிடைக்காததால் கள்ளச்சாராயம் காய்ச்சிய நபர் டிக்-டாக் வீடியோ மூலம் மாட்டிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

tik tok video
tik tok video
author img

By

Published : May 4, 2020, 7:49 PM IST

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த தெற்கு பொய்கை நல்லூர்ப் பகுதியைச் சேர்ந்தவர் பூஞ்சோலை என்ற தமிழ்செல்வன். ஊரடங்கு உத்தரவு காரணமாக, மதுக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டதால், சில தினங்களுக்கு முன்பு கள்ளச்சாராயம் காய்ச்ச முடிவெடுத்துள்ளார்.

அதன்படி தனது வீட்டின் பின்பக்க கொள்ளையில் அடுக்கு பானைகளை வைத்து எரிசாராயம் காய்ச்சியுள்ளார். எரிசாராயம் காய்ச்சியதோடு மட்டுமல்லாமல் அதனை வீடியோவாக எடுத்து டிக்-டாக்கில் பதிவு செய்துள்ளார். அதில், கோயில் மணியோசை படத்தில் இடம்பெறும் "ஆண்டவன் யாரையும் விட்டதில்லை, வாழ்க்கையின் வட்டத்திலே என்ற பாடலோடு பதிவாகியுள்ளது.

கள்ளச்சாராயம் காய்ச்சி மாட்டிக்கொண்ட நபர்

இந்த டிக்-டாக் வீடியோ காட்சியைக் கண்ட வேளாங்கண்ணி காவல்துறையினர் பூஞ்சோலை என்கிற தமிழ்செல்வனை கைது செய்து தமிழ்நாடு மதுவிலக்கு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். வேளாங்கண்ணி அருகே மது கிடைக்காத காரணத்தால் சொந்தமாக கள்ளச்சாராயம் காய்ச்சி, டிக்-டாக் வீடியோ மூலம் மாட்டிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: கோவிட்-19 பாதிப்பு டாப் டூ மாநிலங்கள் விவரம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.