நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்து கத்தரிப்புலம் கிராமத்தைச் சேர்ந்த 70 வயது நபர் மூச்சுத்திணறல் ஏற்ப்பட்டதால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருக்குமோ என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு, அவரது ரத்தம், சளி மாதிரிகள் திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இறந்தவரின் பரிசோதனை முடிவுகள் வந்த பின்னரே அவர் இறப்பிற்கான காரணம் தெரியவரும் என்றாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கரோனா வைரஸ் தொற்று நோயால் இறந்தவர்களை, அடக்கம் செய்யும் முறையில் அவரின் உடலை அடக்கம் செய்ய நாகை மாவட்ட ஆட்சியர் பிரவீன் பி. நாயர் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:சென்னையில் 110 பேருக்கு கரோனா பாதிப்பு!