ETV Bharat / state

கற்றது கையளவு : 82 வயதில் 25ஆவது பட்டப்படிப்புக்கு விண்ணப்பித்த முதியவர்! - Gurumurthy 82 year old man applied for his 25th degree in kuthalam

மயிலாடுதுறை அருகே 82 வயதில் 25ஆவது பட்டப்படிப்புக்கு விண்ணப்பித்த முதியவரை, பல்கலைக்கழக துணைவேந்தர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

82 வயதில் 25வது பட்டப்படிப்புக்கு விண்ணப்பித்த முதியவர்

author img

By

Published : Dec 23, 2021, 10:56 PM IST

Updated : Dec 24, 2021, 12:02 AM IST

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்திற்கு அருகில் உள்ளது கதிராமங்கலம். தஞ்சை மாவட்ட எல்லையான கதிராமங்கலத்தைச் சேர்ந்த 82 வயதான குருமூர்த்தி பாலிடெக்னிக் ஆசிரியராக இருந்து ஓய்வுபெற்றவர்.

அரசுப் பணியில் இருக்கும்போதே 1964-முதல் திறந்தவெளி பல்கலைக்கழகங்கள் மூலம் பகுதிநேர மற்றும் அஞ்சல் வழி பட்டய வகுப்புகள் மற்றும் பட்ட மேற்படிப்பு ஆராய்ச்சிப்படிப்புகள் ஆகியவற்றில் சேர்ந்து படித்து வருகிறார்.

கற்றது கையளவு என்று கூறும் குருமூர்த்தி திருமணம் செய்துகொள்ளாமல் படிப்பில் ஏற்பட்ட ஆர்வம் காரணமாகத் தொடர்ந்து பயின்று வருகிறார். இதுவரை பி.ஏ, எம்.ஏ, எம்.பில், பிஹெச்டி என 24 பட்டங்களைப் பெற்றுள்ளார்.

82 வயதில் 25ஆவது பட்டப்படிப்புக்கு விண்ணப்பித்த முதியவர்

ஓய்வு பெறுவதற்கு முன்பு 12 பட்டயப் படிப்புகளும் ஓய்வு பெற்றதற்குப் பிறகு 12 பட்டயப் படிப்புகளும் படித்து முடித்துள்ளார். படிப்பதற்குத் தான் செலவு செய்யும் தொகையைச் செலவாக நினைத்ததில்லை என்றும், தனது அறிவை வளர்த்துக் கொள்ளும் விதமாக இந்தப் படிப்புகள் அமைந்துள்ளன என்றும் குருமூர்த்தி தெரிவிக்கின்றார்.

25ஆவது பட்டப்படிப்பாக எம்.ஏ போலீஸ் அட்மினிஸ்ட்ரேஷன் என்ற பாடப்பிரிவைத் தேர்வு செய்து, இன்று (டிச.23) திறக்கப்பட்ட தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் விண்ணப்பம் செய்து அதற்கான பாடப் புத்தகங்களைப் பெற்றுக் கொண்டார். 82 வயதில் 25ஆவது பட்டப்படிப்பிற்கு விண்ணப்பம் செய்த குருமூர்த்திக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் பார்த்தசாரதி சால்வை அணிவித்துப் பாராட்டுத் தெரிவித்தார்.

நேரம் தவறாமை மற்றும் திட்டமிடல் ஆகியவை தனது படிப்புகளுக்கு மிகவும் உபயோகமாக இருந்ததாகத் தெரிவிக்கும் குருமூர்த்தி இளைய தலைமுறையினர் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் மூழ்கியிருந்து நேரத்தை வீணடிப்பதாகவும், வாழ்க்கையை அர்த்தத்துடன் வாழ வேண்டும் என்றும்; வாழ்க்கையைக் கடந்து செல்லக் கூடாது என்றும்; எனக்கு இதுபோன்ற படிப்புகள் உதவி செய்ததாகவும் 22 வயது இளைஞரைப் போல் உற்சாகத்துடன் தெரிவிக்கிறார்.

இதையும் படிங்க: Sri Lanka PM Rajapaksa: திருப்பதி ஏழுமலையான் தரிசனத்திற்கு வந்த ராஜபக்சே, அவரது குடும்பத்தினருக்கு வரவேற்பு

Last Updated : Dec 24, 2021, 12:02 AM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.