மயிலாடுதுறை: தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வருகின்ற 19ஆம் தேதி நடைபெற உள்ளது.
கடந்த மாதம் 28ஆம் தேதி முதல் தொடங்கிய வேட்புமனு தாக்கல் இன்றுடன்(பிப்.04) நிறைவு பெற்றது. இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கு உட்பட்ட வார்டுகளுக்கான வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்வதில் தீவிரம் காட்டினர்.
இதனையடுத்து நாம் தமிழர் கட்சி சார்பில் மயிலாடுதுறை நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் 23 வார்டுகளில் நாம் தமிழர் கட்சியினர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
மக்களுக்கு சேவை செய்ய 75வயதில் களமிறங்கிய நாதக வேட்பாளர்
இந்தநிலையில் 17-வது வார்டில் நாம் தமிழர் கட்சி சார்பில், 75 வயது மூதாட்டி சொர்ணாம்பாள் என்பவர், மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் நோக்கத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
வயது முதிர்ந்த மூதாட்டி என்று பாகுபாடு பார்க்காமல், நாம் தமிழர் கட்சியில் சீட் கொடுத்துள்ளது அனைவரையும் வியப்பிலும், ஆச்சரியத்திலும் ஆழ்த்தியுள்ளது.
முன்னதாக சொர்ணாம்பாள் மனு தாக்கல் செய்ய வரும்போது வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள், நாம் தமிழர் கட்சியின் கரும்பு விவசாயி சின்னத்தைக் குறிப்பிடும் வகையில், கரும்புகளை கைகளில் எடுத்து வந்தனர்.
இதையும் படிங்க: 'அழுது புரண்டதால் அதிகம் ஒண்ணு' - திருச்சி காங்கிரஸ் களேபரங்கள்