ETV Bharat / state

60 ஆண்டுகால வாழ்வு: மனைவி இறந்த அதே நாளில் உயிரைவிட்ட கணவர் - nagapattinam 60 years married died on sameday

மயிலாடுதுறை அருகே மனைவி இறந்த துக்கம் தாங்காமல் கணவர் உயிரிழப்பு; இறப்பிலும் பிரியாத தம்பதியினர் மறைவால் கிராமமே பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளது.

nagapattinam, nagapattinam couples, nagapattinam 60 years married died on sameday
60 ஆண்டுக்கால வாழ்வு
author img

By

Published : Sep 11, 2021, 10:54 PM IST

மயிலாடுதுறை: குத்தாலம் தாலுக்கா திருவாவடுதுறை ஊராட்சி முடுக்குத் தெருவைச் சேர்ந்தவர்கள் கலியபெருமாள் (88), மாரியம்மாள் (82) தம்பதியினர். இருவருக்கும் கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று மூன்று மகள்கள், இரண்டு மகன்கள் உள்ளனர்.

அவர்கள் பிள்ளைகள் அனைவருக்கும் திருமணமாகிவிட்ட நிலையில், இந்த தம்பதிகள் தங்களது மூத்த மகன் செழியன் பாதுகாப்பில் அவர்கள் வீட்டிலேயே இருந்து வந்தனர். இந்நிலையில், வயது மூப்பின் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு மாரியம்மாள் நேற்று (செப். 10) இரவு உயிரிழந்தார்.

இணை பிரியா இணையர்கள்

60 ஆண்டுகளுக்கும் மேலாக தன்னுடன் வாழ்ந்த தனது இணையை பிரிந்த துக்கம் தாங்காமல் அவரது கணவர் கலியபெருமாள் அடுத்த சில மணி நேரங்களிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

இதனையடுத்து உறவினர்கள், கிராம மக்கள் அனைவரும் சேர்ந்து மறைந்த தம்பதியினருக்கு முறைப்படி இறுதிச் சடங்கு செய்து அடக்கம் செய்தனர். மேலும், மனைவி இறந்த துக்கத்தில் கணவனும் உயிரிழந்த சம்பவத்தால் திருவாவடுதுறை கிராமமே பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளது.

இதையும் படிங்க: நோய் தொற்று காலம் இது - பண்டிகை நாட்களில் உங்கள் கைவசம் இருக்கவேண்டியவை என்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.