மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூலம் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தினரால் கிடங்குகளில் சேமித்து வைக்கப்படுகிறது.
இந்த நெல் மூட்டைகள் அரவை மில்லுக்கு அனுப்பி அரிசியாக்கப்பட்டு, நியாய விலை கடைகளுக்கு வழங்கப்படுகின்றன. இதேபோல மயிலாடுதுறை, தரங்கம்பாடி, குத்தாலம், சீர்காழி தாலுகாக்களில் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் அந்தந்தப் பகுதியில் உள்ள கிடங்கில் அடுக்கி வைக்கப்படுகின்றன.
இன்று சீர்காழி ரயில் நிலையத்திருந்து 2,000 டன் எடை கொண்ட 49 ஆயிரத்து 600 நெல் மூட்டைகள் 42 ரயில் பெட்டிகள் மூலம் தர்மபுரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதையும் படிங்க: 200 டோக்கனுக்கு 2000 பேர் காத்திருப்பு' - தடுப்பூசி தட்டுப்பாடால் பொதுமக்கள் தவிப்பு