மயிலாடுதுறை மாவட்டத்தில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்மூட்டைகள் தமிழ்நாடு நுகர்ப் பொருள் வாணிபக்கழகத்தினர் பல்வேறு கிடங்குகளில் பாதுகாப்பாக அடுக்கி வைக்கப்படும்.
அந்த நெல் மூட்டைகளை அரவை மில்லுக்கு அனுப்பி அவற்றை அரிசியாக்கி ரேஷன் கடைகளுக்கு விநியோகத்திற்கு வழங்கி வருகின்றனர். இந்நிலையில், மயிலாடுதுறை, தரங்கம்பாடி, குத்தாலம் தாலுக்காக்களில் கொள்முதல் செய்யப்பட்டு கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டிருந்த 2 ஆயிரம் டன் நெல் மூட்டைகளை லாரிகள் மூலம் மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் 52 வேகன்கள் கொண்ட சரக்கு ரயிலில் ஏற்றினர். இந்த நெல் மூட்டைகள் மதுரையில் உள்ள அரவை ஆலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதையும் படிங்க:நெல் கொள்முதல் நிலையத்தில் கணக்கில் வராத 1.07 லட்சம் பறிமுதல்