நாகை மாவட்டம், எருக்கட்டாஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்மோகன்(53). இவர் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். மனைவி, பிள்ளைகளுடன் வசித்துவரும் இவர், வழக்கம்போல் வேலைக்குச் சென்றுள்ளார். மேலும் இவரது மனைவி, குழந்தைகள் தங்களது பாட்டி வீட்டிற்கும் சென்றதாகக் கூறப்படுகிறது.
இரவு ஊர் திரும்பிய அவரது மனைவி, வீட்டின் முன்புற கதவு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர் வீட்டினுள் சென்று பார்த்தபோது அறையில் இருந்த பீரோ கதவு உடைக்கப்பட்டு, அதிலிருந்த 20 சவரன் நகைகளை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதனையடுத்து ராஜ்மோகன் பொறையாறு காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், மோப்ப நாய், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:12 லட்சத்துடன் திறந்து கிடந்த ஏடிஎம் இயந்திரம்