நாகப்பட்டினம்: வடுகச்சேரியில் மகாத்மா காந்தி வேலை உறுதியளிப்புத் திட்டத்தின்கீழ் வடக்குத் தெருவில் மயான சாலை அமைக்கும் பணி இன்று (பிப்ரவரி 26) நடைபெற்றது. அப்பொழுது சாலைக்கு இடையூறாக இருந்த வேப்பமரத்தை வெட்டியபோது அதிலிருந்த விஷ தேனீக்கள் பணியில் ஈடுபட்டிருந்த 100 நாள் பணியாளர்களை விரட்டத் தொடங்கியது.
விஷ தேனீக்கள் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் விரட்டி விரட்டிக் கொட்டியதில் 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதனையடுத்து காயமடைந்தவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு வடுகச்சேரி ஆரம்பச் சுகாதார நிலையத்தில் அனுமதித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக 13 பெண்கள், ஏழு ஆண்கள் ஆகியோர் நாகப்பட்டினம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
இதையும் படிங்க: பங்குச்சந்தை நிலவரம் - நேற்று சரிவு; இன்று உயர்வு