மயிலாடுதுறையில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூலம் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்படுகின்றது. கொள்முதல் செய்யப்படும் நெல்மூட்டைகள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தினரால் கிடங்குகளில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இந்த நெல் மூட்டைகள் அரவை மில்லுக்கு அனுப்பி அரிசியாக்கப்பட்டு, நியாய விலை கடைகளுக்கு வழங்கப்படுகின்றன.
இதேபோல், மயிலாடுதுறை, தரங்கம்பாடி, குத்தாலம், சீர்காழி தாலுகாக்களில் கொள்முதல் செய்யப்படும் நெல்மூட்டைகள் கிடங்கில் அடுக்கி வைக்கப்படுகின்றன. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தால் அரசு, தனியார் மில்லுக்கு அரவைக்காக நெல் மூட்டைகள் அனுப்பி வைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதன்படி நேற்று (மார்ச்5) திருவண்ணாமலையில் உள்ள போளூர் எம்.ஆர்.எம் நெல் அரவை மில்லுக்கு இரண்டாயிரம் டன் நெல்மூட்டைகள் அரவைக்காக சரக்கு ரயிலில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டன.
இதையும் படிங்க: சென்னையில் 11 ஆண்டுகளுக்குப் பின் தேர்தல் விளம்பரம் செய்ய அனுமதி!