நாகப்பட்டினம் மயிலாடுதுறை மாவட்டத்தில் விளைந்த நெல்லை விவசாயிகளிடமிருந்து தமிழ்நாடு அரசு, நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்துவருகிறது. அவற்றை மயிலாடுதுறையில் பல்வேறு இடங்களிலுள்ள கிடங்குகளில் சேமித்துவருகிறது.
இந்த நெல்லை, அரைத்து அரிசியாக்கி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக அங்காடிகள் மூலம் பொதுவிநியோகத் திட்டத்தின்கீழ் பொதுமக்களுக்கு வழங்கிவருகிறது. அரிசியாக்குவதற்காக, பல்வேறு மாவட்டங்களிலுள்ள அரசின் நவீன அரிசி ஆலை, தனியார் அரிசி அரவை ஆலைக்கு அனுப்பிவைக்கப்படுவது வாடிக்கை.
மயிலாடுதுறை, தரங்கம்பாடி, குத்தாலம், சீர்காழி தாலுகாக்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை மயிலாடுதுறை ரயில் நிலையத்திலிருந்து 2 ஆயிரம் மெட்ரிக் டன் எடை கொண்ட நெல் மூட்டைகளை 42 சரக்கு பெட்டிகளில் தலா 1200 மூட்டைகள் வீதம் 50 ஆயிரம் நெல்மூடைகள் ரயிலில் ஏற்றப்பட்டு காரைக்குடிக்கு அனுப்பிவைக்கப்பட்டது.