ETV Bharat / state

மயிலாடுதுறையில் அரசு உத்தரவை மீறிய 2 கடைகளுக்கு சீல் - தமிழ்நாட்டில் கரோனா

நாகப்பட்டினம்: மாயிலாடுதுறையில் அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்ட இரண்டு கடைகளுக்கு அலுவலர்கள் சீல் வைத்தனர்

2-shops-sealed-in-mayiladuthurai
2-shops-sealed-in-mayiladuthurai
author img

By

Published : Apr 19, 2020, 3:36 PM IST

கரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் அத்தியாவசிப் பொருள்களை விற்பனை செய்யும் கடைகளுக்கு மட்டும் சில விதிமுறைகளுடன் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து அத்தியாவசிப் பொருள்களை அதிக விலைக்கு விற்பனை செய்தல், கால அவகாசம் முடிந்தும் கடையை திறந்துவைத்தல் உள்ளிட்ட விதி மீறல் காரணமாக பல கடைகளுக்கு அந்தந்த மாவட்ட நிர்வாகம் சீல் வைத்துவருகிறது.

அதன்படி, நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பால், மருந்தகங்கள் தவிர மற்றக் கடைகள் மூடி வைக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் உத்தரவிடப்பட்டது. அதனால் மயிலாடுதுறையில் அத்தியாவசிய கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. அதையடுத்து மாயிலாடுதுறை நகர் பகுதிகளில் கோட்டாட்சியர் மகாராணி தலைமையில் நகராட்சித்துறை அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.

அரசு உத்தரவை மீறிய 2 கடைகளுக்கு சீல்

அந்த சோதனையில் கோமதி தியேட்டர் ரோடு, சின்னக்கடை வீதி ஆகிய இடங்களில் விதிமுறைகளை மீறி அத்தியாவசியப் பொருள்களை விற்பனை செய்த இரண்டு கடைகளுக்கு சீல் வைத்தனர். அதையடுத்து சாலையோர விற்பனையில் ஈடுபட்ட காய்கறி கடை, இளநீர் கடையின் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அதேபோல் மாப்படுகை கிராமத்தில் மீன் வியாபாரம் செய்த மொத்த வியாபார கடைக்கு சுகாதாரத் துறையினர் ரூ. 50 ஆயிரம் அபராதம் விதித்து, விற்பனைக்கு பயன்படுத்திய சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

இதையும் படிங்க: ஆவடியில் மேலும் நான்கு பேருக்கு கரோனா! தெருக்களுக்கு சீல் வைத்த மாநகராட்சி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.