ETV Bharat / state

கட்டையால் அடித்த காவலர்; இருவர் படுகாயம் - காவலர் தாக்கியதில் இருவர் படுகாயம்

சீர்காழியில் காவலர் தனசேகரன் என்பவர் முன்விரோத தகராறு காரணமாக தாக்கியதில் இருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், தனசேகரனிடம் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

கட்டையால் அடித்த காவலர்
கட்டையால் அடித்த காவலர்
author img

By

Published : Sep 13, 2021, 9:03 AM IST

மயிலாடுதுறை: சீர்காழி ஈசானிய தெருவைச் சேர்ந்தவர் தனசேகரன் (35). இவர் வைத்தீஸ்வரன் கோவில் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். தனசேகரனின் உறவினர்களுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பிரதீப் (20) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இதுதொடர்பாக, மூன்று மாதங்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டு இருதரப்பினரும் சமாதானமாக சென்றுள்ளனர். இந்நிலையில், பிரதீப் அவரது உறவினரான அமிர்தராஜ் (35) என்பவருடன் வந்து தனசேகரன் உறவினர் வீட்டில் நேற்று (செப். 12) தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

கட்டையால் அடித்த காவலர்

இதுகுறித்து, தகவலறிந்த காவலர் தனசேகரன் விரைந்து வந்து பிரதீப், அமிர்தராஜ் ஆகியோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒருகட்டத்தில், ஆத்திரமடைந்த காவலர் தனசேகரன் கட்டை, கம்பி ஆகியவை கொண்டு தாக்கியதில் பிரதீப், அமிர்தராஜ் இருவரும் பலத்த காயமடைந்தனர்.

அவர்கள் இருவரையும், அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இச்சம்பவம் குறித்து சீர்காழி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து காவலர் தனசேகரனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: வைரலாகும் வடிவேலுவின் பிறந்தநாள் புகைப்படம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.