மயிலாடுதுறை: குத்தாலம் தாலுகா கந்தமங்கலம் பகுதியை சேர்ந்த சண்முகசுந்தரம், மணிமேகலை தம்பதியினருக்கு சன்சிகா (9) சுஜி (8) இரண்டு மகள்கள் உள்ளனர். சண்முகசுந்தரம் ஆந்திராவில் டிரைவர் வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் சன்சிகா மற்றும் சுஜி ஆகியோர் தனது நண்பர்களுடன் அருகே உள்ள ஆயிகுளத்தில் மீன்பிடிக்க சென்றனர். அப்போது சன்சிகா மற்றும் சகோதரி சுஜியும் ஆகிய இருவரும் குளத்தில் தவறி விழுந்தனர்.
மற்ற குழந்தைகள் கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து குளத்திலிருந்து குழந்தையை மீட்டனர். ஆனால் குழந்தை இருவருமே உயிரிழந்து விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு குழந்தைகளின் உடல்கள் உடற்கூராய்வுக்கு அனுப்பபட்டன.
மேலும், இந்தச் சம்பவம் குறித்து பாலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். குழந்தைகள் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: சீர்காழியில் 6 ஆயிரம் லிட்டர் டீசலுடன் டேங்கர் லாரி மின்கம்பத்தில் மோதி விபத்து