மயிலாடுதுறை: சீர்காழி அருகே தென்பாதி பகுதியைச் சேர்ந்த பிரசாத் என்பவரின் மகன் ஹரி பிரசாத் (16). இவர் தனியார் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று இரவு தனது நண்பர்களுடன் இரு சக்கர வாகனத்தில் கடைவீதிக்குச் சென்றுள்ளார்.
இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் சீர்காழி பேருந்து நிலையம் அருகே முன்னால் சென்று கொண்டிருந்த லாரியை முந்த முயன்றுள்ளனர். அப்பொழுது வேகத்தடையில் ஏறிய போது இருசக்கர வாகனம் நிலை தடுமாறியதால் பின்னால் அமர்ந்து சென்ற ஹரி பிரசாத் தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்து படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்து வந்த சீர்காழி போலீசார் மாணவர் ஹரி பிரசாத்தின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், இவ்விபத்து குறித்து வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புதிய பேருந்து நிலையம் அருகே ஏற்பட்ட விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: துருக்கி, சிரியாவில் 15,000-ஐ கடந்த உயிர் பலி - மீட்பு பணிகள் தீவிரம்!