ETV Bharat / state

கரோனா பாதித்ததாக பொய்யான தகவல் பரவியதால் ரயிலில் பாய்ந்து உயிரிழந்த இளைஞர்!

author img

By

Published : Apr 1, 2020, 12:29 PM IST

மதுரை: வில்லாபுரத்தைச் சேர்ந்த இளைஞருக்கு கரோனா உள்ளது என பொய்யான தகவல் பரவியதால் விரக்தியடைந்த அவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.

ரயிலில் பாய்ந்து உயிரிழந்த இளைஞர்
ரயிலில் பாய்ந்து உயிரிழந்த இளைஞர்

மதுரை வில்லாபுரத்தைச் சேர்ந்தவர் முஸ்தபா (35). இவர் கேரளாவில் கூலித்தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன.

இந்தநிலையில், ஊரடங்கு அமல்படுத்துவதற்கு முன்பு கேரளாவிலிருந்து திரும்பிய முஸ்தபா, மதுரை பீபீகுளம் அருகேயுள்ள முல்லைநகரிலுள்ள தனது தாய் வீட்டில் தங்கியுள்ளார். இவருக்கு சளி, இருமல், சோர்வு இருந்துவந்துள்ளதால் அவருக்கு கரோனா பாதிப்பு இருக்கலாம் என கருதிய அக்கம்பக்கத்தினர் சுகாதாரத் துறைக்கும், தல்லாகுளம் காவல் துறையினருக்கும் தகவல் கொடுத்தனர்.

சுகாதாரத் துறையினர் முல்லைநகர் வந்து இவரிடம் விசாரணை நடத்தி முஸ்தபாவையும் அவரது தாயாரையும் அவசர ஊர்தி மூலம் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்க முடிவு செய்தனர். ஆனால், அவசர ஊர்தி வர தாமதம் ஆனதால் அவர்களை டாடா ஏசி வாகனத்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

அங்கு முஸ்தபாவை பரிசோதித்த மருத்துவர்கள் இவருக்கு கரோனா இல்லை என உறுதிசெய்தனர். பின்னர், அவரையும், அவரது தாயாரையும் வீட்டிற்கு அனுப்பிவைத்தனர். இந்நிலையில் முஸ்தபா கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வீடியோ என்று ஒரு காணொலி தற்போது வைரலாக பரவியுள்ளது.

ரயிலில் பாய்ந்து உயிரிழந்த இளைஞர்

இதனால் விரக்தியடைந்த முஸ்தபா சென்னையிலிருந்து நெல்லைக்கு சீனி மூட்டைகளை ஏற்றி வந்த சரக்கு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் முஸ்தபா உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க: கரோனா பீதியில் ஒருவர் தற்கொலை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.