ETV Bharat / state

இளைஞர் வெட்டிக்கொலை; 7 பேர் கொண்ட கும்பலுக்கு வலைவீச்சு! - மதுரை மாவட்ட செய்திகள்

மதுரை: சோழவந்தான் அருகே மது போதையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இளைஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Youth massacre near Madurai; Police web for 7-member gang!

author img

By

Published : Dec 9, 2020, 11:06 PM IST

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகேவுள்ள பன்னியான் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார்.

இவர் தனது இருசக்கர வாகனத்தில் மதுரை நோக்கி சென்ற போது அவரை வழிமறித்த 7 பேர் கொண்ட கும்பல் செந்தில்குமாரை கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சராமரியாக தாக்கி விட்டு தப்பியோடியது.

இதில் படுகாயமடைந்த செந்தில்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் சம்பவம் நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் உயிரிழந்தவரின் உடலைக் கைப்பற்றிய சொக்கானூரணி காவல்துறையினர், உடற்கூராய்வுக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில், செந்தில்குமார் தனது நண்பர்களுடன் கணவாய் மலை பகுதியில் மது அருந்திய போது, அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் நண்பர்களே அரிவாளால் வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பியோடியது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதையடுத்து தப்பியோடிய ஏழு பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:பாலாற்றில் அடித்து செல்லப்பட்ட இளைஞர் மூன்று நாள்களுக்கு பிறகு சடலமாக மீட்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.