மதுரை மாவட்டம், அவனியாபுரம் பிரசன்னா காலனி பகுதியைச் சேர்ந்தவர் பாபுலால். இவரது, மகள் துர்காதேவி (21). இவர், மதுரை கீழவெளிப் பகுதியிலுள்ள கடை ஒன்றில் பணிபுரிந்து வந்தார். வேலைக்குச் செல்வதற்காக அவரது உறவினருடன், கீழவெளிப் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
இந்நிலையில், நேற்று (டிச.22) காலை வழக்கம்போல் பணிக்குச் செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் தந்தையுடன் சென்றுகொண்டிருந்தார். அப்போது மதுரை கீழவெளிப் பகுதியில் ஒரு புறத்திலிருந்து மறு புறமாக கடக்க முயன்றபோது அதிவேகமாக வந்த மதுரை மாநகராட்சிக்குச் சொந்தமான குப்பை லாரி ஒன்று இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இதில், நிலைதடுமாறி கீழே விழுந்த துர்காதேவியின் தலையில் லாரி ஏறி இறங்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே தலைநசுங்கி உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த காவல் துறையினர், துர்காதேவியின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக மதுரை இராசாசி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், லாரி ஓட்டுநரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: யமுனா அதிவேக நெடுஞ்சாலையில் பயங்கர விபத்து- 5 பேர் உயிரிழப்பு...!