தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் நேற்று (மே.07) பொறுப்பேற்றுக் கொண்ட நிலையில், தனது தேர்தல் வாக்குறுதியாக அறிவித்த ஐந்து முக்கிய திட்டங்களுக்குக் கையெழுத்திட்டார்.
அதில் ஒன்றாக மாநகரங்களில் உள்ள சாதாரண பேருந்துகளில் மகளிர்கள் அனைவரும் இலவச பயணம் செய்யலாம் என அறிவித்திருந்தார். இந்நிலையில் அத்திட்டம் தமிழ்நாடு முழுவதும் இன்று (மே.08) முதல் அமலுக்கு வந்தது.
இதனையடுத்து மதுரை மாநகர பேருந்துகளில் பயணச் சீட்டு இன்றி இலவசமாகப் பெண்கள் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்தத் திட்டம் வரவேற்கத்தக்க ஒன்று எனக் கூறி பெண்கள், முதலமைச்சருக்கு தங்களது நன்றியினை தெரிவித்துள்ளனர்.