ETV Bharat / state

பேரிகார்டுகளில் தனியார் விளம்பரங்களை அனுமதிப்பது ஏன்? - நீதிமன்றம் கேள்வி - road barricade

மதுரை: தேசிய நெடுஞ்சாலையில் வைக்கப்படும் பேரிகார்டுகளில் தனியார் விளம்பரங்களை அனுமதிப்பது ஏன் என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
author img

By

Published : Dec 10, 2020, 4:16 PM IST

மதுரை: சாலைகளில் வைக்கப்படும் பேரிகார்டுகள் தொடர்பாக மதுரையைச் சேர்ந்த சரவணன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொது நல மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில், "சாலைகளில் வைக்கப்பட்டுள்ள பேரிகார்டுகள் பல விபத்துகளுக்கு காரணமாக அமைகின்றன. 2019ஆம் ஆண்டு 57,228 சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ள நிலையில், 67 ஆயிரத்து 132 பேர் காயமடைந்துள்ளனர். 10 ஆயிரத்து 525 பேர் உயிரிழந்துள்ளனர். தொழிலகங்கள், நிறுவனங்கள் போன்றவை தங்களது நிறுவனங்களுக்கு முன்பாக உள்ள பொதுசாலைகளில் விளம்பரம் செய்யும் வகையில் பேரிகார்டுகளை வைக்கின்றன.

பேரிகார்டுகளில் ஒளிரும் ஸ்டிக்கர்கள் முறையாக ஒட்டப்படாததால் இரவு நேரங்களில் விபத்துகள் அதிகரிக்கின்றன. இதுகுறித்து அலுவலர்களிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆகவே தமிழ்நாட்டின் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளிலும், பொது இடங்களிலும் விபத்தை ஏற்படுத்தும் வகையில் கால்நடைகள் சுற்றித்திரிவதைத் தடுக்கவும், நெடுஞ்சாலைகள் மற்றும் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள பேரிகார்டுகளை அகற்றவும், எந்தெந்த இடங்களில் பேரிகார்டுகளை வைக்கலாம் என்பது குறித்து முறையான வழிகாட்டுதல்களை பிறப்பிக்கவும் உத்தரவிட வேண்டும்" எனத் தெரிவித்திருந்தார்.

இதனை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு, தமிழ்நாட்டில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் எவ்வளவு வேகத்தில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளன? சாலைகளில் வைக்கப்படும் பேரிகார்டுகளில் தனியார் விளம்பரங்கள்
ஏன் அனுமதிக்கப்பட்டுகின்றன? " என கேள்வி எழுப்பினர்.

தொடர்ந்து, அதிவேகமாக சென்றதாக எவ்வளவு வழக்குகள் பதியப்பட்டுள்ளன? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் தமிழ்நாட்டில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் பயணிக்க வேகம் நிர்ணயம் செய்வது தொடர்பாகவும், பேரிகார்டுகளில் உள்ள விளம்பரங்களை அகற்றுவது குறித்தும் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: எஸ்.சி., எஸ்.டி. காலிப் பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.