மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள நிலையூர் கண்மாய் பகுதிக்கு வைகை அணையிலிருந்து நீர் நிரப்பப்பட்டது. கண்மாய் மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பட்டு வருகின்றன. மேலும், இக்கண்மாயில் மீன்வளத்துறையினரால் மீன்களும் வளர்க்கப்படுகின்றன.
கண்மாயில் தண்ணீர் வற்றும் சமயத்தில், மீன்வளத்துறையிலிருந்து மீன் பிடிப்பதற்கான அனுமதி வழங்கப்படுவது வழக்கம். இந்த நிலையில் கூத்தியார்குண்டு பகுதியில் மீன் பிடிப்பதற்காக உள்ளூர் மக்கள் 300க்கும் மேற்பட்டோர் மீன்வளத்துறை ஆணையத்தில் உறுப்பினராக உள்ளனர். ஆனால் அவர்களை விடுத்து, 30க்கும் மேற்பட்ட வெளியூர் ஆட்களுக்கு மீன் பிடிப்பதற்கான அனுமதியை மீன்வளத்துறை ஆணையம் வழங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனையறிந்த கிரம மக்கள் அனைவரும் நிலையூர் கண்மாயில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மீன்வளத் துறையில் பதியப்பட்டுள்ள உள்ளூர் மக்களுக்கு மீன் பிடிப்பதற்கான அனுமதி வழங்க வேண்டும் என ஊர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வெளியூர் ஆட்கள் மீன்பிடிக்க அனுமதியளிக்கக் கூடாது என பலமுறை மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும், இதுவரை எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றஞ்சாட்டியுள்ளனர். கிராம மக்கள் அனைவரும் கண்மாயில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
இதையும் படிங்க:‘அரசாங்க பணம் எப்படி வீணாகிறது பாருங்கள்’- கிராம மக்கள் குற்றச்சாட்டு!