ETV Bharat / state

தலையாரிகளுக்கு ஓய்வூதியம் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு! - Village Assistent

மதுரை: கிராம உதவியாளர்களாக மாற்றம் செய்யப்பட்ட தலையாரிகள் உள்ளிட்டோருக்கு ஓய்வூதியம் வழங்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

Village Assistent Pension Case Judgement

author img

By

Published : Jun 17, 2020, 6:32 AM IST

தமிழ்நாட்டில் தலையாரி, வெட்டியான் போன்ற கிராம அடிப்படை ஊழியர்கள் தொகுப்பூதியத்தில் வெகு காலமாக பணிபுரிந்து வந்தனர். இவர்கள் கிராம உதவியாளர்களாக பெயர் மாற்றம் செய்யப்பட்டு காலமுறை ஊதியத்தில் பணி நிரந்தரம் செய்யப்பட்டனர்.

இவர்கள் பணியில் சேர்ந்த நாளிலிருந்து கணக்கிட்டு ஓய்வூதியம் வழங்கக்கோரி நூற்றுக்கும் மேற்பட்டோர் அரசிடம் மனு அளித்தனர். இந்த மனுக்கள் நிராகரிக்கப்பட்டதால் மதுரை, தஞ்சை மாவட்டங்களைச் சேர்ந்த அழகு, தங்கராஜ், பாகிருஷ்ணன், நீலமேகம், வேலு, நடராஜன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் தங்களின் கோரிக்கையை நிராகரித்து பிறப்பித்த உத்தரவுகளை ரத்து செய்தும், தங்கள் முழுப்பணிக்காலத்தையும் ஓய்வூதியத்திற்கு கணக்கிட உத்தரவிடக்கோரியும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள் அனைத்தையும் நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் விசாரித்தார். அப்போது, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்குரைஞர், "தலையாரிகளுக்கு பணியில் சேர்ந்த நாளிலிருந்து பணிக்காலத்தை கணக்கிட்டு ஓய்வூதியம் வழங்கக்கோரி உயர் நீதிமன்றம் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகளில் உத்தரவு பிறப்பித்துள்ளது. இருப்பினும் அரசு அந்த உத்தரவுகளை செயல்படுத்த மறுக்கிறது" என்று வாதிட்டார்.

இதையடுத்து நீதிபதி, "மனுதாரர்களின் கோரிக்கையை நிராகரித்து பிறப்பிக்கப்பட்ட அனைத்து இடைக்கால உத்தரவுகளும் ரத்து செய்து உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து, “மனுதாரர்கள் பணியில் சேர்ந்த நாளிலிருந்து 31.5.1995 வரையிலான 50 விழுக்காடு காலத்தையும், பணி நிரந்தரம் செய்யப்பட்டதில் இருந்து ஓய்வு வரையிலான காலத்தையும் சேர்த்து ஓய்வூதிய கணக்கிற்கு எடுத்துக்கொள்ள வேண்டும்” என்றும் கூறினார்.

மேலும், “இதனை எட்டு வாரத்திற்குள் வருவாய்த்துறை முதன்மை செயலர் தலைமை கணக்காயருக்கு அனுப்ப வேண்டும். தலைமை கணக்காயர் நான்கு வாரத்தில் ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனவும் உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: ஆபாசப்படம் எடுத்து மிரட்டியதால் தீக்குளித்த சிறுமி உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.