மேலவளவு ஊராட்சித் தலைவர் முருகேசன் படுகொலையில் தண்டனை பெற்ற 13 பேர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நன்நடத்தை அடிப்படையில் கடந்த 9ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டனர்.
விடுதலையை எதிர்த்து பல்வேறு தரப்பினர் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வரும் நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், பல்வேறு தமிழ் அமைப்பை சார்ந்த 200க்கும் மேற்பட்டோர் மேலவளவு குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டதை திரும்பப் பெற வேண்டியும், குற்றவாளிகளை மீண்டும் சிறையில் அடைக்க வேண்டியும் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலம் அடுத்த அண்ணா பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து அங்கு வந்த காவல்துறையினர், ஆர்ப்பாட்டத்தை தடுக்க முயன்றதால் இரு தரப்பினருக்குமிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் அனைவரையும் காவல்துறையினர் குண்டுக்கட்டாக தூக்கி வாகனத்தில் ஏற்றிச் சென்றனர். இதனால் சிறிது நேரம் அண்ணா பேருந்து நிலையம் அருகே போக்குவரத்து பதிப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: விசிகவினர் மீதான வழக்கு: விசாரணைக்கு தடை விதித்த உயர் நீதிமன்றம்!