இதுகுறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, மதுரையில் ஆதரவு தேவைப்படும் விளிம்புநிலை மக்களுக்கு அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று மதிய உணவு வழங்கும் வகையில், மூவாயிரம் பேருக்கு உணவு வழங்கி, மே ஒன்றாம் தேதி இந்த அன்னவாசல் திட்டம் தொடக்கப்பட்டது.
இன்றைய நிலையில் நாள்தோறும் நான்காயிரத்து 500 பேருக்கு முட்டையுடன் மதிய உணவு வழங்கப்பட்டுவருகிறது. 400க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் உணர்வுப்பூர்வமாக இப்பணியில் ஈடுபட்டுவருகின்றனர். "ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல்" என்பது வள்ளுவன் மொழி. 'அகரம்' மூலம் ஏழை மக்களின் கல்விப் பசி ஆற்றி வரும் நடிகர் சூர்யா, இப்போது 'ஆகாரம்' மூலம் அன்னவாசல் வழி வந்து விளிம்பு நிலை மனிதரின் பசியாற்றவும் முன்வந்துள்ளார்.
நல்ல முன்னெடுப்புக்கள் பல நல்ல உள்ளங்களை ஒருங்கிணைத்துக் கொண்டே நகரும். அப்படியான நகர்வில், தன் பங்களிப்பாக அன்னவாசல் திட்டத்துக்கு, ஐந்து இலட்சம் ரூபாயை நன்கொடையாக அளித்துள்ள சூர்யாவிற்கு தனது நன்றியை தெரிவிக்கிறேன்" என அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் பார்க்க: அதிமுக பிரமுகர் வெறிச்செயல்: எரித்துக் கொல்லப்பட்ட சிறுமியின் கலங்கவைக்கும் வாக்குமூலம்!