ETV Bharat / state

'நல்லது செய்ய வயது ஒரு தடை இல்லை' - ஊராட்சித் தலைவரான 79 வயது மூதாட்டி பேட்டி

மதுரை: அரிட்டாபட்டி ஊராட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு வெற்றிபெற்ற 79 வயது மூதாட்டி வீரம்மாள், நல்லது செய்ய வயது ஒரு தடை இல்லை என்று கூறியுள்ளார்.

veerammal predident arittapatti
veerammal predident arittapatti
author img

By

Published : Jan 3, 2020, 9:23 AM IST

மதுரை மாவட்டம் மேலூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட அரிட்டாபட்டி ஊராட்சியில் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இதில், மொத்தம் 1,808 வாக்குகள் பதிவாகின. ஆறு வேட்பாளர்களுடன் போட்டியிட்ட 79 வயதான வீரம்மாள் 250 வாக்குகள் பெற்று 199 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

வெற்றிபெற்ற வீரம்மாள் ஈடிவி பாரத்திற்கு அளித்த பிரேத்யேக பேட்டியில், "எனது ஊர் மக்களுக்கு குடிநீர், மின்சாரம், சாக்கடை வசதி, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தருவேன் என்று வாக்குறுதி அளித்திருந்தேன். அதனைக் கண்டிப்பாக நிறைவேற்றுவேன். என்னைப் பொறுத்தவரை வயது ஒரு தடை இல்லை. எந்த நேரத்திலும் ஊரின் நலனுக்காக அலுவலர்களைச் சந்தித்து நல்லது செய்ய எப்போதும் முயற்சி மேற்கொள்வேன்" என்றார்.

70 வயது மூதாட்டி வீரம்மாள் அழகப்பன்

மற்ற வேட்பாளர்களைப் போல சுவரொட்டிகள் ஒட்டியோ, துண்டறிக்கை விநியோகம் செய்தோ பரப்புரை மேற்கொள்ளாமல், ஆட்டோவில் ஒலிபெருக்கி மூலமாக மட்டுமே மக்களிடம் கோரிக்கைகள் வைத்து வீரம்மாள் பரப்புரை மேற்கொண்டு வெற்றிபெற்றுள்ளார் என்று ஊர்மக்கள் பெருமையோடு பகிர்ந்துகொண்டனர்.

இதையும் படிங்க:

73 வயதில் ஊராட்சி மன்றத் தலைவரான மூதாட்டி!

Intro:ஊராட்சி தலைவராக 79 வயது மூதாட்டி வீரம்மாள் வெற்றி - மதுரை மாவட்டத்தில் நிகழ்ந்த அதிசயம்

மதுரை மாவட்டத்தில் இன்று நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவில் அரிட்டாபட்டி ஊராட்சி தலைவராக 70 வயது மூதாட்டி வீரம்மாள் அழகப்பன் தேர்வாகியுள்ளார்.Body:ஊராட்சி தலைவராக 79 வயது மூதாட்டி வீரம்மாள் வெற்றி - மதுரை மாவட்டத்தில் நிகழ்ந்த அதிசயம்

மதுரை மாவட்டத்தில் இன்று நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவில் அரிட்டாபட்டி ஊராட்சி தலைவராக 70 வயது மூதாட்டி வீரம்மாள் அழகப்பன் தேர்வாகியுள்ளார்.

மதுரை மாவட்டம் மேலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அரிட்டாபட்டி ஊராட்சி வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. அரிட்டாபட்டி புரட்சித் பதிவான மொத்த வாக்குகள் 1808. ஏழு வேட்பாளர்கள் களத்தில் இருந்தும் 79 வயதான வீரம்மாள் 250 வாக்குகள் பெற்று தனக்கு அடுத்தபடியாக வந்த வேட்பாளரை விட 199 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

டிடிவி பாரத் செய்திகளுக்காக அரிட்டாபட்டியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினோம். அப்போது பேசிய வீரம்மாள், எனது ஊர் மக்களுக்கு குடிநீர் மின்சாரம் சாக்கடை வசதி சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தருவேன் என்று இந்த தேர்தலின்போது வாக்குறுதி அளித்திருந்தேன் அதனை கண்டிப்பாக நிறைவேற்றுவேன்.

என்னைப்பொறுத்த வரை வயது ஒரு தடை இல்லை எந்த நேரத்திலும் ஊரின் நலனுக்காக அதிகாரிகளை சந்தித்து நல்லது செய்ய எப்போதும் முயற்சி மேற்கொள்வேன் என்றார்

பிற ஊராட்சிகளை போலன்றி சுவரொட்டிகள் ஒட்டி துண்டறிக்கை விநியோகம் செய்து பிரச்சாரம் மேற்கொள்ளாமல். ஆட்டோவில் ஒலிபெருக்கி மூலமாக மட்டுமே மக்களிடம் கோரிக்கைகள் வைத்து வீரம்மாள் பிரச்சாரம் மேற்கொண்டதை ஊர்மக்கள் பெருமையோடு பகிர்ந்து கொண்டனர்.

2020 ஆம் ஆண்டிலிருந்து அடுத்த பத்தாண்டுகள் இளைஞர்களில் ஆண்டாக இருக்கும் என்று ஐநா அறிவித்துள்ள நிலையில் 79 வயதான மூதாட்டி ஒருவர் உள்ளாட்சியில் வெற்றி பெற்று சாதனை படைத்திருக்கிறார் என்பது பெரும் வியப்பிற்குரியது தான்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.