ETV Bharat / state

’வெண்ணிலா கபடி குழு' நடிகர் ஹரி வைரவன் காலமானார்!!

வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் நடித்த நடிகர் ஹரி வைரவன் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.

’வெண்ணிலா கபடி குழு' நடிகர் ஹரி வைரவன் காலமானார்

author img

By

Published : Dec 3, 2022, 10:10 AM IST

மதுரை: அழகர்கோவில் சாலையில் அமைந்துள்ள கடச்சனேந்தல் கிராமத்தில் வசித்து வருபவர் நடிகர் ஹரி வைரவன். வெண்ணிலா கபடி குழு, குள்ளநரி கூட்டம், நான் மகான் அல்ல உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்தவர்.

இவர் சிறுநீரகக் கோளாறு காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை மதுரை கடச்சனேந்தலில் உள்ள அவரது வீட்டில் உயிரிழந்தார்.

மருத்துவ சிகிச்சை மேற்கொண்டபோது அவருக்கு, நடிகர் விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால், நடிகர் சூரி உள்ளிட்ட திரைத்துறையைச் சார்ந்த பலர் உதவி செய்தனர்.

உடல் நிலை மீண்டு வந்த நிலையில், நடிகர் ஹரி வைரவன் உயிரிழந்தது திரைத்துறையினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவருக்கு மனைவி மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளனர்.

மதுரை அழகர்கோவில் சாலையில் அமைந்துள்ள கடச்சனேந்தல் கிராமத்தில் இன்று மாலை 4.30 மணியளவில் இறுதிச்சடங்குகள் நடைபெறும் என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: முதியோர் இல்லத்தில் 15 நாட்கள் சேவை... ஜாமின் கேட்டவருக்கு நீதிமன்றம் உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.