ETV Bharat / state

அண்ணா வீர தீர விருது பெறும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் ஓட்டுநர் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

மதுரை: வைகை எக்ஸ்பிரஸ் ரயில் ஓட்டுநர் சுரேஷ் அண்ணா வீர தீர விருது பெற்றுள்ளார். இந்த விருதை குடியரசு தினத்தன்று தமிழ்நாடு முதலமைச்சரிடமிருந்து பெறுகிறார்.

அஃப
ஃப
author img

By

Published : Jan 24, 2021, 2:31 PM IST

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்தவர் ஜே.சுரேஷ். வைகை எக்ஸ்பிரஸ் ரயிலின் லோகோ பைலட்டாக (என்ஜின் டிரைவர்) பணியாற்றினார். இவர் கடந்த ஆண்டு நவம்பர் 18ஆம் தேதி மதுரையிலிருந்து வைகை எக்ஸ்பிரஸில் திருச்சி நோக்கி பயணிகளுடன் சென்று கொண்டிருந்தபோது கொடை ரோட்டுக்கும் அம்பாத்துறைக்கும் இடையே தண்டவாளத்தில் பாறைகளும், மணலும் சரிந்து விழுந்து கிடந்ததைக் கண்டவுடன், சுதாரித்து ரயிலை நிறுத்தினார்.

சுரேஷின் சமயோஜிதத்தால் அச்சமயம் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் மேற்கொண்ட 1500 பயணிகளின் உயிர் காப்பாற்றப்பட்டதுடன், மிகப்பெரும் விபத்தும் தவிர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. துணிச்சலான இந்த செயலின் காரணமாக, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பரிந்துரையின் பேரில், வீர தீர செயலுக்கான தமிழ்நாடு அரசின் அண்ணா விருது லோகோ பைலட் ஜே.சுரேஷுக்கு வழங்கப்படவுள்ளது.

வருகின்ற ஜனவரி 26-ஆம் தேதி குடியரசு தினத்தன்று சென்னை மெரினாவில் நடைபெறும் விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் இந்த விருதை வழங்குகிறார்.

இதுகுறித்து சுரேஷிடம் தொலைபேசி வழியாக பேசியபோது, 'கடந்தாண்டு நவம்பர் 18ஆம் தேதி வழக்கம்போல்தான் மதுரையிலிருந்து வைகை எக்ஸபிரஸ் கிளம்பிச் சென்றது. கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாய் ரயில்களின் பயணம் தொடங்கிய நேரம்.

வழக்கம்போல் மணிக்கு 90 கி.மீ- வேகத்தில் திருச்சியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறோம். கொடைரோட்டுக்கும் அம்பாத்துறைக்கும் இடையே சற்று வளைந்து செல்லும் ரயில் பாதையில், திடீரென பக்கவாட்டு நிலம் சரிந்து கற்களும், பாறைகளும் குவிந்துகிடக்கின்றன.

விருது பெறுவதற்கான அறிவிப்பு
விருது பெறுவதற்கான அறிவிப்பு

சரியாக ரயிலுக்கும் அந்த இடத்திற்கும் 450 மீட்டர் தொலைவு. உடனடியாக சுதாரித்து, சடர்ன் பிரேக் அடித்தேன். வேகமாக வந்த வைகை எக்ஸ்பிரஸ் ரயில் சரியாக 100 மீ இடைவெளியில் கிறீச்சிட்டு நின்றது. வெறும் 5 நொடிகள் தாமதமாகியிருந்தாலும் மிகப்பெரும் விபத்து ஏற்பட்டு, அந்நேரம் ரயிலில் பயணம் செய்த 1500 பயணிகளின் உயிர் உடைமை அனைத்தும் பெரும் சேதத்திற்கு உள்ளாகியிருக்கும்.." என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.