மதுரை: செக்கானூரணி அருகே உள்ள கிண்ணிமங்கலம் கிராமத்தில் ஏகநாதர் கோயில் அமைந்துள்ளது. இங்கு கடந்த ஆண்டு, ஜூன் மாதம் தொல்லியல் ஆய்வாளர் காந்திராஜன் தமிழி எழுத்துப் பொறிக்கப்பட்ட எண்பட்டை வடிவிலான தூணில் கல்வெட்டைக் கண்டறிந்தார்.
அதில் உள்ள எழுத்துகளின் அடிப்படையில், இந்தக் கோயில் தமிழ்நாட்டின் முதல் பள்ளிப்படை கோயில் என அறியப்பட்டது. இந்தக் கல்வெட்டு குறித்த சர்ச்சைகள் தொல்லியல் ஆர்வலர்களிடையே பெரும் அதிர்வை ஏற்படுத்தியது.
ஆய்வு மேற்கொண்ட தொல்லியல் குழு
இந்நிலையில் இந்தக் கோயில் தொடர்பாக மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல்செய்யப்பட்டது. இதனையடுத்து ஏகநாதர் கோயிலில் தொல்லியல் ஆய்வாளர்கள் கொண்ட குழு ஆய்வுசெய்து, அறிக்கைத் தாக்கல்செய்ய உத்தரவிடப்பட்டது.
இதன் அடிப்படையில் தொல்லியல் அறிஞர் கே. ராஜன் தலைமையிலான ஒன்றிய, மாநில தொல்லியல் துறை உயர் அலுவலர்கள், கோயில், கோயிலில் உள்ள கல்வெட்டுகள் குறித்து இன்று (ஜூலை 19) ஆய்வுசெய்தனர்.
முழுமையான ஆய்வுகளுக்குப் பிறகு, நீதிமன்றத்தில் தொல்லியல் குழுவின் அறிக்கைத் தாக்கல்செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: மதுரை அருகே கி.பி. 10ஆம் நூற்றாண்டு மகாவீரர் சிற்பம் கண்டுபிடிப்பு!