மதுரை மாவட்டம் பரவை பகுதியில் ஊரடங்கு நேரத்தில் கஞ்சா விற்பனை அதிகம் நடைபெறுவதாக சமயநல்லூர் காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனிடையே, மாறுவேடத்தில் சென்ற ஆய்வாளர் கண்ணன் கஞ்சா விற்பனை செய்பவர்களை கண்காணித்தார். அப்போது, அந்த பகுதியில் மளிகைக் கடைக்கு பொருள்கள் வாங்குவது போல் நடித்து, கட்டை பைக்குள் வைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.
விசாரணையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது மதுரை பரவை பகுதியைச் சேர்ந்த முத்தையா, செல்லூரைச் சேர்ந்த காசிநாதன் ஆகியோரை மடக்கிப் பிடித்தார். பின்னர் அவர்களிடமிருந்து 25 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதனிடையே கைதான இருவரும் அடிக்கடி கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததால், மதுரை மாவட்ட எஸ்.பி.மணிவண்ணன் உத்தரவின் பேரில் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் இருவர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து தண்டனை காலத்தை நீட்டிக்க உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: ரம்மியில் 10.50 லட்ச ரூபாயை கோட்டைவிட்ட மகன் - தந்தைக்கு நெஞ்சுவலி!