திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே சிந்தாமணி சந்தைப்பகுதியில் கடை நடத்தி வரும் சாமிதுரை உள்ளிட்ட 13 பேர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர்.
அதில்," திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே சிந்தாமணி சந்தைப்பகுதியில் 18 கடைகள் உள்ள நிலையில், சுமார் 1, 000 பேர் இங்கு பணியாற்றி வருகின்றனர். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், திருச்சி சிந்தாமணி சந்தைப் பகுதியை மேம்படுத்துவதற்காக பணிகள் தொடங்க உள்ளன.
இந்நிலையில் திருச்சி ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளின் மேலாண்மை இயக்குநர், கடைகளை காலி செய்யுமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். கடைகளை காலி செய்யவும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.
ஆகவே சிந்தாமணி சந்தைப் பகுதியில் கடை நடத்தி வருபவர்களுக்கு மாற்றிடம் வழங்கவும், அதுவரை கடைகளை காலி செய்யும் நடவடிக்கைகளுக்கு இடைக்கால தடை விதிக்கவும் உத்தரவிட வேண்டும்" என மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்யநாராயணன், ராஜமாணிக்கம் ஆகியோர் அடங்கிய அமர்வு," சிந்தாமணி சந்தைப் பகுதியில் கடை நடத்தி வருபவர்களில் உரிமம் பெற்றவர்கள் எத்தனை பேர்? உரிமம் இல்லாதவர்கள் எத்தனை பேர்? என்பது குறித்த விபரங்களை திருச்சி மாநகராட்சி ஆணையர் அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
திருச்சி சிந்தாமணி சந்தைப் பகுதி வழக்கு: மாநகராட்சி ஆணையர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு - திருச்சி சிந்தாமணி சந்தை பகுதி
மதுரை: திருச்சி சிந்தாமணி சந்தைப் பகுதியில் கடை நடத்தி வருபவர்களில் உரிமம் பெற்றவர்கள் எத்தனை பேர்? என திருச்சி மாநகராட்சி ஆணையர் அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.