திருச்சி மாவட்டம் காவிரி ஆற்றுப்படுகையில் மணல் குவாரிகள் அமைப்பதற்கு தடைவிதிக்கக்கோரி உத்தரவிட வேண்டும். மணல் குவாரிகளால் இதுவரை காவிரி ஆற்றில் ஏற்பட்ட மண் அரிப்பைத் தடுக்கவும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும் தேவையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனு மீதான விசாரணையில் தமிழ்நாடு பொதுப்பணித் துறை செயலர், திருச்சி மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அலுவலர்கள் பதில் மனு தாக்கல்செய்ய உத்தரவிட்டு அந்த வழக்கு விசாரணையை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைத்து சென்னை உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மனோகரன் என்பவர் தாக்கல்செய்த இந்த மனு விசாரணையில், இன்று நீதிபதிகள் துரைசுவாமி, ரவீந்திரன் அமர்வு இவ்வாறு தீர்ப்பளித்துள்ளனர். இதையும் படிங்க: நீதிபதிகள் துரைசுவாமி , ரவீந்திரன் அமர்வு