ETV Bharat / state

'அரசிதழில் அனுமதி இல்லாத பகுதிகளில் மஞ்சுவிரட்டு, ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு அனுமதி இல்லை' - உயர் நீதிமன்றத்தில் பதிலளித்த அரசு

அரசிதழில் அனுமதி இல்லாத பகுதிகளில் மஞ்சுவிரட்டு, ஜல்லிக்கட்டுப் போன்ற போட்டிகளுக்கு அனுமதி இல்லை என உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசிதழில் அனுமதி இல்லாத பகுதிகளில் மஞ்சுவிரட்டு, ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு அனுமதி இல்லை - தமிழக அரசு

author img

By

Published : Apr 1, 2022, 6:54 PM IST

மதுரை: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி தாலுகா, கண்டனூர் கிராமத்தைச் சேர்ந்த தர்மலிங்கம் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினை தாக்கல் செய்திருந்தார்.

அதில், "சிவகங்கை மாவட்டம், காரைக்குடி தாலுகா, கண்டனூர் கிராமத்தில் ஸ்ரீ கறிவேப்பிலை காளியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் படைப்புத்திருவிழா வருகிற மார்ச் 29, 30, 31ஆம் தேதி நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.

வடமாடு மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி வேண்டி கோரிக்கை: கோயில் முக்கிய நிகழ்வாக வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டியை மார்ச் 31ஆம் தேதி நடத்த ஊர் மக்களால் முடிவு செய்யப்பட்டுள்ளது. வடமாடு மஞ்சுவிரட்டுப்போட்டி நடத்துவது குறித்து அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த ஒரு பதிலும் தெரிவிக்கப்படவில்லை. திமுக மற்றும் அதிமுகவினருக்கு மஞ்சுவிரட்டுப்போட்டி, உடனடியாக அனுமதி அளிக்கப்படுகிறது.

எனவே, சிவகங்கை மாவட்டம், காரைக்குடி தாலுகா, கண்டனூர் கிராமத்தில் ஸ்ரீ கறிவேப்பிலை காளியம்மன் கோயில் படைப்பு விழாவையொட்டி வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டிக்கு அனுமதி அளிக்க உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.

அரசிதழில் இல்லாத போட்டிகளுக்கு அனுமதி இல்லை: இந்த மனு நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், விஜயகுமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், 'வடமாடு மஞ்சுவிரட்டுப்போட்டிகள் நடத்துவது குறித்து பல்வேறு வழக்குகள் தினம்தோறும் பட்டியலிடப்படுகிறது. அரசிதழில் இல்லாத ஜல்லிக்கட்டு, வடமாடு மஞ்சுவிரட்டுப்போட்டிகள் நடத்துவது குறித்து அரசின் நிலைப்பாடு என்ன?' என கேள்வி எழுப்பினார்.

அரசு தரப்பில், ’அரசிதழில் இல்லாத போட்டிகளுக்கு வடமாடு மஞ்சுவிரட்டு, ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு அனுமதி இல்லை’ எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நீதிபதிகள், வழக்கு குறித்து காரைக்குடி துணை காவல் கண்காணிப்பாளர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஏப்ரல் 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.

இதையும் படிங்க:ரயில் தண்டவாளங்களில் 50 யானைகள் உயிரிழப்பு- அஸ்வினி வைஸ்னவ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.