ETV Bharat / state

Summer Special Train: தென்காசி, ராஜபாளையம், மதுரை வழியாக காசிக்கு சிறப்பு ரயில்!

திருவனந்தபுரம் கொச்சுவேலியில் இருந்து தென்காசி, ராஜபாளையம், மதுரை வழியாக காசிக்கு சுற்றுலா செல்லும் வகையில் ''பாரத் கௌரவ்'' சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Mar 25, 2023, 12:59 PM IST

மதுரை: இந்தியாவில் உள்ள பண்பாட்டு, கலாசார மையங்களை சுற்றிப் பார்க்க "பாரத் கௌரவ்" என்ற சுற்றுலா ரயிலை இந்திய ரயில்வே இயக்கி வருகிறது. இந்த திட்டத்தில் மேலும் ஒரு ரயிலை இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்து உள்ளது. இதையடுத்து இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் வருகிற மே மாதம் முதல் திருவனந்தபுரம் மாவட்டம் கொச்சுவேலியில் இருந்து காசிக்கு "பாரத் கௌரவ்" சுற்றுலா ரயில் இயக்கப்பட ஏற்பாடு செய்து உள்ளது.

மே மாதம் 4 ஆம் தேதி திருவனந்தபுரம் மாவட்டம், கொச்சுவேலியில் இருந்து புறப்படும் இந்தச் சுற்றுலா ரயில் கொல்லம், செங்கோட்டை, தென்காசி, ராஜபாளையம், விருதுநகர், மற்றும் மதுரை வழியாக சென்று மே மாதம் 6 அன்று ஒடிசா மாநிலம் பூரி சென்றடைகிறது. பூரியில் உள்ள ஜெகநாதர் கோவில் மற்றும் கோனார்க் சூரிய கோவில் தரிசனம் முடித்து விட்டு, மே 8 அன்று கொல்கத்தாவில் உள்ள காளி கோவிலுக்கு செல்கிறது.

மே 9 அன்று பால்குனி நதியில் நீராடி முன்னோர்களின் பித்ரு பூஜைக்கு பிறகு பீகாரிலுள்ள மகா போதி கோவில் தரிசனம். பிறகு மே 10 அன்று காசியில் உள்ள புனித கங்கையில் நீராடி விட்டு காசி விஸ்வநாதர், காசி விசாலாட்சி, மற்றும் அன்னப்பூரணி கோவில்கள் தரிசனம். பின், மே மாதம் 11 அன்று அயோத்தியா சரயு நதியில் நீராடி விட்டு இராமஜென்ம பூமி கோவில்கள் தரிசனம். மே 12 தேதி அன்று அலகாபாத்தில் உள்ள பிரக்யா ராஜ் திரிவேணி சங்கமத்தில் நீராடி விட்டுப் பின் அனுமன் கோவில் தரிசனம் முடித்து மே 14 அன்று சுற்றுலா ரயில் கொச்சுவேலி வந்து சேரும்.

இந்த ரயிலில் 4 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதிகள் உள்ள பெட்டிகள் மற்றும் 7 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி கொண்டப் பெட்டிகள் மற்றும் ஒரு உணவுத் தயாரிக்கும் பெட்டி ஆகியவை இணைக்கப்படுகிறது. இந்த சுற்றுலா ரயிலுக்கான பயணச் சீட்டுகளைப் பதிவு செய்யவும், இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழக அலுவலர்களை 8287931977 & 8287932122 என்ற அலைபேசி எண்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம் எனவும் தெற்கு ரயில்வே தெரிவித்து உள்ளது.

இதையும் படிங்க: "தி எலிபன்ட் விஸ்பரர்ஸ்" பார்ட்-2 : பொம்மன் - பெள்ளியின் அரவணைப்பில் அடுத்த குட்டி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.