ETV Bharat / state

கண்டெய்னர் லாரி மூலம் கடத்த முயன்ற பல லட்சம் மதிப்புள்ள புகையிலைப் பொருள்கள் பறிமுதல்! - தடைசெய்யப்பட்ட புகையிலை கடத்தலில் தமிழ்நாடு

மதுரை: பெங்களூருவிலிருந்து மதுரைக்கு போலி பதிவெண் கொண்ட கண்டெய்னர் லாரி மூலம் கடத்திவரப்பட்ட பல லட்சம் மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை உணவுப் பாதுகாப்புத் துறையினர் பறிமுதல் செய்தனர்.

Container trucks
author img

By

Published : Oct 24, 2019, 10:42 PM IST

மதுரை அருகே உள்ள சிலைமானில் காவல் ஆய்வாளர் மாடசாமி தலைமையில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஒரே பதிவு எண் கொண்ட இரு கண்டெய்னர் லாரிகள் மதுரையை நோக்கி வந்தது. இதனால் சந்தேகமடைந்த காவல் துறையினர் இரு கண்டெய்னர் லாரிகளையும் மடக்கிப் பிடித்து சோதனை செய்தனர்.

அதில், 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களான பான்பராக், பான் மசாலா, குட்கா உள்ளிட்டவை இருந்தன. அவை பெங்களூருவிலிருந்து சிலைமானில் உள்ள குடோனிற்கு கொண்டுச் சென்றதும் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து அலுவலர்கள் குறிப்பிட்ட குடோனில் அதிரடி சோதனை நடத்தினர்.

சோதனையில் அங்கு ஏராளமான குட்கா, பான்பராக் உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள் பதுக்கிவைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, புகையிலைப் பொருள்கள், இரு கண்டெய்னர் லாரியை அலுவலர்கள் பறிமுதல் செய்து குடோனிற்கு சீல் வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் மதுரை இஸ்மாயில்புரத்தைச் சேர்ந்த சுப்புராஜ், அவரது மகன் பிரகாஷ் ஆகிய இருவரை கைது செய்தனர்.

புகையிலைப் பொருள்கள் கடத்த பயன்படுத்திய கண்டெய்னர் லாரிகள்

மேலும், காவல் துறையினர் கண்டெய்னரை ஓட்டிவந்த ஓட்டுநர் சுதர்சன், திருப்பதி, கோவிந்தன் ஆகிய மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்து தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க:Latest Crime News:சேலத்தில் பல லட்சம் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல்!

Intro:*பெங்களூரில் இருந்து மதுரைக்கு போலி பதிவெண் முலம் லாரியில் கடத்தி வரப்பட்ட பல லட்சம் மதிப்புள்ள பறிமுதல் - இருவர் கைது*Body:*பெங்களூரில் இருந்து மதுரைக்கு போலி பதிவெண் முலம் லாரியில் கடத்தி வரப்பட்ட பல லட்சம் மதிப்புள்ள பறிமுதல் - இருவர் கைது*

மதுரை அருகே சிலைமானில் காவல் ஆய்வாளர் மாடசாமி தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரே பதிவு எண் கொண்ட இரு கண்டெய்னர் லாரி மதுரையை நோக்கி சென்றது. சந்தேகமடைந்த போலீசார் இரு கண்டெய்னர்களையும் திறந்து சோதனையில் ஈடுபட்டனர்.

அதில் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான பான்பராக், பான் மசாலா, குட்கா உள்ளிட்ட பொருட்கள் இருந்ததும் அவை பெங்களூருலிருந்து சிலைமானில் உள்ள குடோனிற்கு கொண்டுசென்றதும் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலறிந்து அதிகாரிகள் குறிப்பிட்ட குடோனில் அதிரடி சோதனை நடத்தினர். சோதனையில் அங்கு ஏராளமான குட்கா, பான்பராக் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து புகையிலை பொருட்கள் மற்றும் இரு கண்டெய்னர்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் குடோனிற்கு சீல் வைத்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மதுரை இஸ்மாயில்புரத்தை சேர்ந்த சுப்புராஜ் மற்றும் அவரது மகன் பிரகாஷ் ஆகிய இருவரை கைது செய்தனர். மேலும் சுதர்சன், கண்டெய்னரை ஓட்டி வந்த ஓட்டுநர்கள் திருப்பதி, கோவிந்தன் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.